“தொடர்கல்வி” என்ற தலைப்பில் இந்தியாவின் முன்னணி மருத்துவர்கள் கலந்து கொண்ட பயிலரங்கம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
நோய்தொற்று உள்ளவர்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது, நோயாளினுடைய நரம்பில் எந்த பகுதியில் அவருக்கு பிரச்சினை உள்ளது என்பதை மிகத் துல்லியமாக கண்டறிய அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம் என்ற முறையை இந்தியா முழுவதும் மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர். இந்த முறை பற்றி புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிலரங்கத்தில், இந்தியாவின் முன்னணி மருத்துவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும் அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம் முறையை பற்றியான இந்த கருத்தரங்கம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி சார்பாக நடைபெறுவது இந்தியாவிலேயே முதல் முறை என்றும் புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டு 3 ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது சாதனை எனவும் மருத்துவர்கள் கூறினர்.