இந்தியாவின் எரிபொருள் தேவை 50 சதவிகிதம் பாதிக்க வாய்ப்பு

சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், இந்தியாவுக்கு எரிபொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் எரிபொருட்கள் தேவையில் 55 சதவீதத்தை சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டன.

இதனால் கடந்த சில நாட்களாக எண்ணெய் கிணறுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த விபத்தால் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதனால், இந்தியாவுக்கு தேவையான எரிபொருட்கள் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version