இந்தியாவின் முதல் திருநங்கை துணை காவல் ஆய்வாளரான ப்ரித்திக்கா யாஷினி, தனது அடுத்த இலக்காக ஐ.பி.எஸ். அதிகாரியாகி நாட்டிற்கும், திருநங்கை சமூகத்திற்கும் சேவை ஆற்ற வேண்டும் என்பதே தமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வருபவர் ப்ரீத்திகா யாசினியைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவரது வாழ்க்கை போராட்டத்தை விளக்கும் வகையிலான குறும்படம் ஒன்று சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், எடிட்டர் லெனின், இந்து என். ராம் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அடுத்த லட்சியமாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி நாட்டிற்கு சேவை செய்வதே தனது நோக்கம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.