இந்தியாவின் முதலாவது சர்வதேச அறிவியல் கண்காட்சி மும்பையில் தொடங்கியது. இந்தியாவின் முதலாவது சர்வதேச அறிவியல் கண்காட்சியான விஞ்ஞான் சமகம், மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் நேற்று துவங்கியது. மும்பையை தொடர்ந்து பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் 11 மாதங்களுக்கு இந்த அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறம் இந்த கண்காட்சியில் அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்படவுள்ளது. மேலும் குழந்தைகளில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஓவியப்போட்டி, எழுத்துப் போட்டி மற்றும் புதிர் ஆகியவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.