இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுப்பிடிப்பு

இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிற இந்த வைரஸ், மராட்டிய மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

வேகமாக பரவும் தன்முடைய இந்த உருமாறிய வைரசை எதிர்கொள்ளும் திறன் கோவாக்சின்,கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version