இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்திருந்த நிலையில், தற்போது நோய் தொற்று சற்றே குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு புதிதாக 3 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 732 பேர் குணமடைந்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 17 புள்ளி 13ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.