இந்தியாவின் பருவநிலை மாற்றம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு மையம் ஒன்று அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளது.
ஆண்டுதோறும், காற்றாலை மின் உற்பத்தி குறித்து அமெரிக்கா ஆய்வு நடத்துவது வழக்கம். இந்நிலையில், வரும் காலங்களில் இந்தியாவின் பருவநிலை மாற்றம் மிகவும் மோசமான கட்டத்தை எட்டும் என்று ஆய்வு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் காற்றாலை மின் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்த திட்டமிட்ட இந்தியாவிற்கு இந்த ஆய்வு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. காற்று மாசுபடுவது இந்தியாவில் அதிகம் உள்ளதாக கூறிய இந்த ஆய்வு, இனி வரும் எந்த பருவநிலையிலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, இளவேனில் மற்றும் கோடை காலங்களில் இந்தியா 63% காற்றாலை மின் உற்பத்தி செய்யும். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இளவேனில் மற்றும் கோடை காலங்களில் செய்யப்படும் மின் உற்பத்தி பருவநிலை காரணமாக 13% சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 50 சதவீதத்தை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இந்த மின் உற்பத்தி சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆய்வு குறித்து இந்திய அரசு தற்போது ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.