இந்தியா வந்தடைந்தது ரஷ்ய போர் கப்பலான வர்யாக்

இந்தியா ரஷ்யா கூட்டுப் பயிற்சிக்காக ரஷ்ய போர்கப்பல் விசாகப்பட்டிணம் துறைமுகத்தை வந்ததடைந்தது.

இந்திரா (INDRA) எனப்படும் இந்திய ரஷ்யா கூட்டுப் போர் பயிற்சி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய போர் கப்பலான வர்யாக் (VARYAG) விசாகப்பட்டிணம் துறைமுகத்தை வந்ததடைந்தது. இந்த கூட்டுப் போர் பயிற்சியானது நாளை தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு நாடுகளுடனான உறவு மேம்படும் வகையிலும், போர் கப்பல்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இந்த கூட்டுப் பயிற்சி உதவியாக இருக்கும் என இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விசாகப்பட்டிணம் வந்தடைந்த ரஷ்ய கடற்படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Exit mobile version