கப்பலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்-அமைச்சர் ஜெய்ஷங்கர்

ஈரானில் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் ‘ஸ்டேனா இம்பெரோ’ எண்ணெய் கப்பல் கடந்த 19ஆம் தேதி பாரசீக வளைகுடா வழியாக சென்றுக் கொண்டிருந்த போது, ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்தது. கப்பலில் 18 இந்திய மாலுமிகள் உட்பட 22 பேர் உள்ளனர். இந்நிலையில், கப்பலில் 18 இந்தியர்களை தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியிருப்பதாகவும், அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கப்பலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழரை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version