இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் அறக்கட்டளை சார்பில், 2019 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி புரஸ்காரம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, நாட்டிய துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பழம்பெரும் நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான வைஜெயந்தி மாலாவுக்கு விருதினை வழங்கி கவுரவித்தார்.