இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அரை சதமும் கடந்தனர். குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஜாசன் ராய் 66 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்

Exit mobile version