அரையிறுதி போட்டியில் நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு ட்ராஃப்போர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. கப்தில் 1 ரன்னிலும் நிகோல்ஸ் 28 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சில், ஜேம்ஸ் நீஷம் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 16 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 46 புள்ளி 1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்தது. மழையின் தாக்கம் அதிகரித்ததால், 23 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த டெய்லர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 239 ரன்களை சேர்த்தது.

Exit mobile version