உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் லண்டனில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் நியூஸிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறினர். 39 புள்ளி 2 ஒவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 179 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 37 புள்ளி 1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.  சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 75 ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் குவித்தனர்.

Exit mobile version