இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: தென்னாப்ரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை தென்னாப்ரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் ஷர்மா மயங்க் அகர்வால் இணை முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா, 176 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக அடி இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 215 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் குவித்த இந்தியா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 39 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், 3ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளுக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

 

Exit mobile version