வாரத்தின் முதல்நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஊரடங்கு உத்தரவால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று தொடக்கம் முதலே வீழ்ச்சியை சந்தித்தன. நிதி, ஆட்டோமொபைல் மற்றும் மெட்டல் பங்குகளில் ஏற்பட்ட இழப்புகள் பங்கு சந்தைகளை வெகுவாக பாதித்தன. ஆனால் நுகர்வோர் பொருட்கள் மற்றும் பார்மா பங்குகளின் லாபம் எதிர்மறையாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 375 புள்ளிகள் சரிந்து 28,440 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 379 புள்ளிகள் சரிந்து 8,281 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.