கொரோனா வைரஸால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்

இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 806 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,363 புள்ளிகளாக நிலைகொண்டது.

மத்திய பட்ஜெட் வெளியான பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு, நேற்று ஒரே நாளில் இந்த அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 251 புள்ளிகள் குறைந்து 11,829 புள்ளிகளாக நிலைபெற்றது. இதேபோன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து 71 ரூபாய் 98 பைசாவாக இருந்தது.

Exit mobile version