இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது

மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 90 உச்சத்தை எட்டி உள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து 90ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version