சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள்

இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கி உள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்து, 36 ஆயிரத்து 512 புள்ளிகளுடன் இருந்தது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் சரிவுடன் தொடங்கி உள்ளது. 180 புள்ளிகள் வரை குறைந்து, 10 ஆயிரத்து 810 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், நாள் முடிவில் 8 ஆயிரத்து 4 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 407 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 359 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 872 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 20 ஆயிரத்து 571 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 155 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான SSE 2 ஆயிரத்து 844 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version