அமெரிக்க இசை நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

அமெரிக்காவின் புகழ்பெற்ற Electronic Music Producer மார்ஷ்மெல்லோவின் நிகழ்ச்சியில், காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இசை நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் இந்திய தேசியக் கொடி பறக்க விடப்பட்டு, வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரங்கில் கூடியிருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மார்ஷ்மெல்லோ தனது ட்விட்டரில் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ஜடேன் ஸ்மித் மற்றும் உலகின் பிரபல Music Producer-களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version