டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தைகளில் மந்தமான வர்த்தகம், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெறுதல் போன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்று காலை பரிவர்த்தனையில் கடும் சரிவையே சந்தித்தது. முந்தைய வர்த்தக நாளைவிட 57 காசுகள் குறைந்து ஒரு டாலர் ரூ.71புள்ளி97 என்ற நிலையில் பரிவர்த்தனையானது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர நடக்கும் பேச்சுவார்த்தையும், அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளின் வலுவான கரன்சிகளுடன் டாலர் மதிப்பு பலவீனமாக இருந்ததும், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இல்லாமல் இருந்ததும், ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்க உதவியாக இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.