ரயில்வேயின் இருவழி தடங்களில், தனியார் மூலம், குத்தகை முறையில் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெரிசல் குறைந்த பகுதிகளிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இதுபோன்ற வழித் தடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தனியாருக்கு ரயில்களை குத்தகைக்கு விட்டு, அதன்மூலம் அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.