நாடு முழுவதும் 261 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 1ம் தேதி ரயில்வே அட்டவணை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், சரக்கு மற்றும் பயணிகளின் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான மிஷன் ரப்தார் என்ற திட்டம் கடந்த 2016 -17 ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ரயில்வேயின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அட்டவணையில் 17 ரயில்வே மண்டலங்களில் 261 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயிலும் பல்வேறு ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் எழும்பூர் -குருவாயூர், எழும்பூர் -கொல்லம், எழும்பூர் -நெல்லை, எழும்பூர் -தஞ்சாவூர் உள்ளிட்ட ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
சென்ட்ரல் -ஆமதாபாத், சென்ட்ரல் பெங்களூரு உள்ளிட்ட ரயில்களின் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்களின் வேகம் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட உள்ளது.