ரயிலில் பயணித்த தாயை காணவில்லை என தவித்த மகனுக்கு இந்திய ரயில்வே டிவிட்டர் மூலம் உதவி செய்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரயிலில் பயணம் செய்த தாயை தொடர்புகொள்ளமுடியாத மகன் சாஷ்வாத் என்பவர் டிவிட்டர் மூலம் இந்திய ரயில்வேயிடம் உதவிக்கேட்டார். அந்த டிவிட்டர் பதிவில், எனது தாயார் ஷீலா பாண்டே என்பவர் அஜ்மீர் – ஷெல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில் ரயில் 12 மணிநேரம் தாமதமாக வந்துள்ளதால் என் தாயை என்னால் தொடர்புக்கொள்ள முடியவில்லை எனவும் என் தாய் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நலமாக இருக்கிறாரா எனத் தெரிந்துக்கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள் எனப் பதிவிட்டு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இந்தியன் ரயில்வே துறை பக்கத்தை டேக் செய்திருந்தார்.