TikTok-கினால் 6 நூற்றாண்டை தொலைத்த இந்திய மக்கள்

TikTok செயலியில் இந்திய மக்கள் கடந்தாண்டு மட்டும் 5.5 பில்லியன் மணி நேரங்களை செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் அதிக அளவிலான மக்கள் உபயோகிக்கும் செயலியில் ஒன்று TikTok. தனிப்பட்ட முறையில் பல தரப்பு மக்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வர,  சில நேரங்களில் பிரச்சனைக்குரிய ஒன்றாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் செயலிகள் குறித்து ஆய்வு செய்து வரும் App Annie நிறுவனம் TikTok செயலி குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2019ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள்  5.5 பில்லியன் மணி நேரங்களை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகமாகும். 2018ம் ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி நேரத்தை செலவழித்துள்ளனர்.

2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட TikTok செயலி பயனாளர்களின் அடிப்படையில்   உலக நாடுகளில் 2 வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 40%  இந்த செயலியை பயன்படுத்துப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version