இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் தலைமை பதவிகளில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். மத்திய அரசின் சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15வது மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவின் தூதுவர்களாக விளங்குவதாகவும், நமது திறன் மற்றும் செயல் வல்லமையின் சின்னமாக உள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
மொரீசியஸ், போர்சுகல், ஐயர்லாந்து ஆகிய நாடுகளில், தலைமை பதவிகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜக்நாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.