இந்திய கடற்படை அதிகாரிகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

இந்திய கடற்படை அதிகாரிகள், ஸ்மார்ட் போன் மற்றும் ஃபேஸ்புக் போன்றவை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகம் வழியே பகைநாட்டு உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில் 7 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இதனால் கடற்படை தகவல்கள் திருடு போகாமல் தடை செய்யும் வகையில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு இந்திய கடற்படை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,  கடற்படை தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் போர் கப்பல்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version