இந்திய தொழில் கூட்டமைப்பின் சர்வதேச கூட்டம் நடைபெற்றது

சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், இந்தியாவில் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாக குறிப்பிட்ட அவர், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்காகவும் முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக கூறினார்.

Exit mobile version