ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதற்காக தயாராகும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியினர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய ஆண்கள் அணியினர் 6-0 என்ற கோல் கணக்கிலும், பெண்கள் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தினர். ஒலிம்பிக் போட்டியில், ஆண்கள் பிரிவில், ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா, அணிகளுடனும், பெண்கள் பிரிவில், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, ஆகிய அணிகளுடனும் இந்திய அணி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.