குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகளை காலதாமதமின்றி வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் வியன்னா ஒப்பந்தப்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை இன்று சந்திக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version