குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
சமீபத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. டெல்லி, உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதே நேரம், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் பேரணியில் ஈடுபட்டனர்.
லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர்.