2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி வரும் மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு மும்பையில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார். இந்திய அணியில் 2-வது கீப்பராக லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பையில் இடம்பெறும் இந்திய அணியின் விவரம் வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), எம்.எஸ்.டோனி, ஷிகர் தவான், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், முஹமது ஷமி, தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா.