இந்திய அணியின் அடுத்த கோச் யார்? …

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடந்த முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வெளியேறியது. இதனால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ள இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்ற திட்டமிட்டுள்ளது. மேலும் இம்முறை பயிற்சியாளர் தேர்வில் அணியின் கேப்டன் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

1.டாம் மூடி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான டாம் மூடி, ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கோச்சாக சிறப்பாக பணி செய்துள்ளார். அவரின் பெயர் தற்போது பரிசீலனையில் உள்ளது.

2.சேவாக்

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னும் சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.டெர்வர் பெலிஸ்

இவரது கோச்சில் தான் தற்போது இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வென்றுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான இவர், இலங்கை அணியையும் வெற்றிகரமாக கோச் செய்துள்ளார். இவரது பயிற்சியின் தலைமையில் தான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

4.மஹிலா ஜெயவர்த்தனே

முன்னாள் இலங்கை அணியின் கேப்டான மஹிலா ஜெயவர்த்தனேவின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோச்சாக சிறப்பாக செயல்பட்டு இரு முறை கோப்பை வென்றுள்ளார்.

5.ஸ்டீபன் பிளெமிங்

முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டான ஸ்டீபன் பிளெமிங்கின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச்சாக சிறப்பாக செயல்பட்டு இரு முறை கோப்பை வென்றுள்ளார்.

6.மிக்கி ஆர்தர்

மிக்கி ஆர்தர், இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கோச்சாக செயல்பட்டார். தென் ஆப்ரிக்காவின் நீண்ட நாள் கோச்சாக செயல்பட்ட அவர், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version