2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தை தவிர்க்குமாறு, தனது கிளைகளுக்கு இந்தியன் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்தியன் வங்கி அனைத்து கிளைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வங்கி டெபாசிட் மெஷின்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் சுழற்சிக்கு விடவேண்டாம் என்றும், அவற்றுக்குப் பதிலாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் ஏ.டி.எம் மெஷின்களில் நிரப்ப வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற சிரமப்படுவதாகவும், மேலும் சில்லறை மாற்ற மீண்டும் வங்கியை நாடுவதால் வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்திலிருந்து உடனடியாக நீக்கும்படி தனது கிளைகளுக்கு இந்தியன் வங்கி உத்தரவிட்டுள்ளது.