பாகிஸ்தான் எல்லை அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர் மாநிலம் கே.ஜி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம், எல்லை பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  பூஞ்ச் பகுதியின் கே.ஜி செக்டாரிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பின்வாங்கினர். எல்லை பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால், காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது. 

Exit mobile version