எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவம் நடந்து வருவதாக கூறினார். இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டரீதியாக காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், அதை எடுத்துக்கொள்ள யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார். பாகிஸ்தான் தொடர்ந்து இதே போன்று செயலில் ஈடுபட்டு வந்தால் வேறுவிதமான பதிலடி தரவேண்டியது வரும் என்றும் அவர் தெரிவித்தார்.