இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் இந்திய – அமெரிக்க ராணுவ வீரர்கள், கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அமெரிக்காவின் விமானப்படை தளம் அமைந்துள்ள மெக்சார்ட் பகுதியில் யுத் அபியாஸ் எனும் பெயரில் இந்தியா-அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி, நாளையுடன் முடிவடைய உள்ளது. இதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா-அமெரிக்கா இடையே அண்மை காலமாக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த பயிற்சி இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version