ஆப்பிள் 15 மேக்புக் ப்ரோ லேப்டாப்புக்கு இந்திய விமானங்களின் தடை

தீப்பிடிக்கும் ஆபாயம் உள்ள காரணத்தால் 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை விமானத்தில் கொண்டு செல்ல வேண்டாம் என இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை விற்பனை செய்தது. அப்படி விற்பனை செய்த லேப்டாப்களின் பேட்டரிகள், அதிகமாக வெப்பமடைந்து தீப்பற்ற வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் 20ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை அடிப்படையாக வைத்து விமான போக்குவரத்து இயக்குநரகம், ‘ பேட்டரி சூடாகி ஆபத்தை விளைவிக்கும் எனும் காரணத்தால் சில 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட லேப்டாப்களை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தும் வரை பயணிகள் யாரும் அதை விமானத்தில் கொண்டுசெல்ல வேண்டாம்’ என்று ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால், 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தும் வரை பயணிகள் யாரும் அதை விமானத்தில் கொண்டுசெல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பேட்டரியை மாற்றும்வரை யாரும் பாதிக்கப்பட்ட லேப்டாப்களை விமானத்தில் கொண்டுவர வேண்டாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான இயக்குநரகங்கள் பாதிக்கப்பட்ட ஆப்பிள் லேப்டாப்களை விமானங்களில் கொண்டுசெல்ல தடைவிதித்துள்ளன. ஒரு வேளை லேப்டாப் ஐ விமானத்தில் கொண்டு செல்ல வேண்டுமானால் லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுவந்து பேட்டரியை டெஸ்ட் செய்துகொள்ளுமாறு விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version