மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க விமானங்கள் அனுப்பப்படுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் கொரோனா அச்சம் காரணமாக மலேசியா வழியாக இந்தியா புறப்பட்டனர். மலேசியாவின் கோலாலம்பூர் வந்த அவர்கள், அங்கிருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 120 இந்திய மாணவர்கள் உள்பட 200 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து இந்தியா அழைத்துவரப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏர் ஏசியா விமானங்கள் மூலம் டெல்லி, விசாகப்பட்டினத்திற்கு அழைத்துவரப்பட உள்ளதாக கூறினார்.