பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பவுலிங்கில் காப்பாற்றுவாரா ஜடேஜா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் மேட்ச் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் யாருமே பெரிதாக ரன் எதுவும் எடுக்கவில்லை. ரோகித் 12, சுப்மன் கில் 21, புஜாரா 1, கோலி 22, ஸ்ரேயஸ் ஐயர் 0, பரத் 17, அக்சர் படேல் 12,  அஸ்வின் 3, ஜடேஜா 4, உமேஷ் யாதவ் 17, சிராஜ் 0 என்று அனைவரும் நடையைக் கட்டினர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ குன்னேமன் 5 விக்கெட்டுக்களையும், நாதன் லியான் 3 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். மேலும் இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டும் எடுத்தனர்.India vs Australia, 2nd Test Day 2 Highlights: Nathan Lyon Takes 5 Wickets As Australia End Day 2 On A High vs India | Cricket News

பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டை  ஜடேஜா 9 ரன்களுக்கு எல்.பி.டபிள்யூ ஆக்கினார். உஸ்மான் கவாஜா 60, லபுஷானே 31, ஸ்டீவ் ஸ்மித் 26 ஆகியோரும் ஜடேஜாவின் பந்துவீச்சிற்கு மடிந்தனர். களத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் 7 ரன்னுடனும், கேமரான் வொய்ட் 6 ரன்னுடனும் இன்றைய ஆட்ட நேர முடிவில் நிலைத்து உள்ளனர். ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா மொத்தமாக் 156 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Exit mobile version