தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 132 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

Exit mobile version