டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து இந்தியா விலகல்?

பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாது என்று, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆசியா ஓசியானியா குரூப் 1 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக மகேஷ் பூபதி தலைமையிலான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார், ரோகன் போபண்ணா, திவிக் சரன் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருந்தனர். செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவை துண்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இரு நாடுகளிடையே அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பாகிஸ்தானில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரை தள்ளி வைக்க வேண்டும் அல்லது வேறு நாட்டிற்கு போட்டியை மாற்ற வேண்டும் என்று சர்வதெச டென்னிஸ் சம்மேளனத்திற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version