News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி ”இந்தியா”

Web Team by Web Team
December 30, 2021
in Top10, TopNews, இந்தியா, கிரிக்கெட், தமிழ்நாடு, விளையாட்டு
Reading Time: 1 min read
0
செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி ”இந்தியா”
Share on FacebookShare on Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கம்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அபாரமாக ஆடிய இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் 123 ரன்கள் விளாசினார். மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர். பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 197 ரன்களுக்கு சுருண்டது. பவுமா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

இறுதி நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்  34 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்த தென்னாப்பிரிக்கா, டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.மதிய உணவு இடைவேளையின் போது, டெம்பா பவுமா மற்றும் மார்கோ ஜான்சன் முறையே 34 மற்றும் 5 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

image
மதிய உணவுக்குப் பிறகு முகமது ஷமி முதல் விக்கெட்டை எடுத்தார் மற்றும் ஆர் அஷ்வின் தொடர்ச்சியான பந்துகளில் இறுதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, செஞ்சுரியனில் இந்தியா தனது முதல் டெஸ்டில் வெற்றி பெற உதவினார். டெம்பா பவுமா 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் 77 ரன்களில் கேப்டன் டீன் எல்கரை விக்கெட்டைக் கைப்பற்றுவதற்கு முன், விறுவிறுப்பான வேகத்தில் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் முகமது சிராஜ் 21 ரன்களில் குயின்டன் டி காக்கை வெளியேற்றினார்.

ஷமி வேகப்பந்து வீச்சால் தொடக்க அமர்வின் மூன்றாவது விக்கெட்டான வியான் முல்டரை வீழ்த்தினார். இது செஞ்சூரியனில் தனது முதல் வெற்றியின் விளிம்பில் இந்தியாவை அழைத்துச் சென்றது. அவர்கள் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் கோட்டையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு முறையும் தோற்றனர்.

கடைசியாக 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்றது.

இந்த வெற்றி இத்தொடரைக் கைப்பற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது,என்பதில் ஐயமில்லை.எனினும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கனியைப் பறிக்க முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

Tags: 1st TestCricketIND vs SAIndianewsjSATest Match
Previous Post

"தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?"

Next Post

மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

Related Posts

இந்திய பட்ஜெட் –  நிர்மலா சீதாரமன் உரை!
அரசியல்

இந்திய பட்ஜெட் – நிர்மலா சீதாரமன் உரை!

February 1, 2023
இஸ்ரேலில் மிகப்பெரிய துறைமுகத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்!
இந்தியா

இஸ்ரேலில் மிகப்பெரிய துறைமுகத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்!

February 1, 2023
இந்தியா போராடி வெற்றி!
இந்தியா

இந்தியா போராடி வெற்றி!

January 30, 2023
இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி!
இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி!

January 29, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
குடியரசு தினவிழா அணிவகுப்பு!
இந்தியா

குடியரசு தினவிழா அணிவகுப்பு!

January 26, 2023
Next Post
மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

Discussion about this post

அண்மை செய்திகள்

தளபதி 67 – ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

தளபதி 67 – ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

February 3, 2023
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

February 3, 2023
பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!

பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!

February 3, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

February 3, 2023
சுங்கச்சாவடி கட்டணம்.. வசூல் அமோகம்..எத்தனை கோடி தெரியுமா?

சுங்கச்சாவடி கட்டணம்.. வசூல் அமோகம்..எத்தனை கோடி தெரியுமா?

February 3, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version