சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் இந்தியாவுக்கு பெட்ரோல் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ஆரம்கோ மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து எண்ணெய் உற்பத்தி குறைந்ததால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்தியா தன்னுடைய கச்ச எண்ணெய் தேவையில் ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவையே சார்ந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு தடையின்றி கச்சா எண்ணெய் கிடைக்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.