நாளை நிகழும் புறநிழல் சந்திரகிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது!

நாளை நிகழ உள்ள புறநிழல் சந்திர கிரகணம், இந்தியாவில் தெரியாது என்று பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இந்திய நேரப்படி நாளை காலை 8.37 முதல் 11.22 வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம் என்றும் பகல் பொழுதில் இந்த கிரகணம் ஏற்படுவதால், இந்தியாவில் இதைக் காண முடியாது என தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version