ரிஷப், தவான் அதிரடியால் 3-வது டி20 போட்டியில் வெற்றி – மே.இ.தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

மேற்கிந்திய தீவுகளுடனான 3-ஆவது டி20 போட்டியில் தவான் மற்றும் ரிஷப் பந்த் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோப் 24 ரன்களுக்கும், ஹெட்மயர் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய டேரன் பிராவோ 43 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து தவானும், ரிஷப் பந்த் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரின் பந்த் 58 ரன்களுக்கும், ஷிகர் தவான் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால், கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மனிஷ் பாண்டே ஒரு ரன் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

மேற்கிந்திய தீவு அனியில் கீமோ பால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் வெற்றியில் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version