இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்கு

இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து நிர்ணயித்த 274 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நிக்கோல்ஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ப்ளன்டெல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கப்தில், 79 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் களமிறங்கிய லாதம், நீஷம், கிராண்ட்ஹோம், சாப்மேன், சௌதி என அனைவரும், சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 273 ரன்களை குவித்தது. டெய்லர் 73 ரன்களுடனும், ஜாமிசன் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில், சாஹல் 3 விக்கெட்டுகளையும், தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Exit mobile version