இந்தியா, நியூஸிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்தது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்துக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று காலை 7.30 மணிக்கு நேப்பியரில் நடைபெறுகிறது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, உலக கோப்பை போட்டிக்கு இது சிறந்த பயிற்சி களம் என தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version