5வது டி20 போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் 5 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுண்ட் மவுங்கானுவில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்த முதல் 4 போட்டிகளிலும் இந்திய அபார வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5 வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் சிறப்பாக பங்காற்றி வருவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. அதேவேளையில், இந்தியாவின் சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், நியூசிலாந்து வீரர்களும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்து வீரர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்நிய மண்ணில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து புதிய வரலாறு படைக்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. மவுண்ட் மவுங்கானுவில் நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 12.30 மணிக்கு துவங்குகிறது.

Exit mobile version