முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற உள்ளது.

மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு துவங்குகிறது.

சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். அதேசமயம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற முனைப்பு காட்டும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Exit mobile version