இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ளது. டி20 தொடரை வென்ற நம்பிக்கையில், ஒரு நாள் தொடரையும் கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், டி20 தொடரை இழந்த இந்தியா ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி, ஹைதராபாத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Exit mobile version